திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் வெங்கடாசலபுரம் ஊராட்சியில் உள்ள மயானத்துக்கு செல்லும் சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தப் பாதையில் ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடப்பதுடன், மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறுவதால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்லும் போது பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.