பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பாலையூர் ஆட்டுப்பண்ணை கசிவுநீர் குட்டையில் இருந்து தெற்குக்காடு செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக வயல்களுக்கு செல்லும் விவசாயிகளும், விளைபொருட்களை கொண்டு செல்வோரும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலையில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதால், இந்த சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.