கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி முத்துகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள தார்சாலை பழுதடைந்ததால், அதை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. ஜல்லிக்கற்கள் மற்றும் சிமெண்டு கலவை கொட்டப்பட்ட நிலையில், சாலைப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலைப் பணி முடிவடையாமல் அப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.