‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-10-11 12:45 GMT

கரூர் மாவட்டம் சுக்காலியூரில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் குறுக்குச் சாலையில் 3 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் சிரமத்துடன் பயணம் செய்வதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளங்கள் இருந்த இடங்களில் ஜல்லிக்கற்கள் கொட்டி தார் ஊற்றி சீரமைத்தனர். இதற்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்