சேதமடைந்த சாலை

Update: 2026-10-11 12:44 GMT

பர்கூர் ஊராட்சி ஒன்றியம் மல்லப்பாடி ஊராட்சிக்குட்பட்ட குமரனங்கனப்பள்ளி மற்றும் இழப்பம் தோப்பு ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு மல்லப்பாடி அடுத்த நாடார் கொட்டாய் என்ற இடத்திலிருந்து செல்லும் சாலை மிகவும் குறுகலாகவும், வளைவாகவும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்களும், பள்ளி கல்லூரி மாணவர்களும் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்