விபத்து அபாயம்

Update: 2026-10-11 12:35 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அதன் சுற்றுப்புற கிராம பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் அன்றாடம் பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி விபத்துகளிளும் சிக்கி வருகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையால் வாகனங்களும் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து கிடக்கும் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்