தாராபுரம் அருகே மாம்பாடி புளியம்பட்டி பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக அநேக இடங்களில் சேறும்-சகதியுமாக காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் அணைத்து வாகனங்களும் தட்டுத்தடுமாறி செல்கின்றன. இதேபோல் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகி்ன்றனர். மேலும், பொதுமக்களும் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பழுதான சாலையை சீரமைத்து தரமான சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.