புதுக்கோட்டை மாநகராட்சி மச்சுவாடி பாலன் நகர் 4-வது வீதியில் பாதாள சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட சாலை 2 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. மழை பெய்யும்போது சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.