புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா மருதம்பட்டி ஊராட்சி கருப்பர்மலை பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள பாலம் குறுகியதாக இருப்பதால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி இந்த சாலையை சீரமைத்து, பாலத்தை விரிவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.