புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் பெரிய பள்ளிவாசல் முதல் தனியார் மருத்துவமனை வரை உள்ள சிமெண்டு சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.