சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-10-11 07:35 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் நாயகனைப்பிரியாள் கிராமத்தில் இருந்து பிரணாக்குளம் செல்லும் முக்கிய சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறுவதால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் விவசாயிகள் சிரமப்படுவதுடன், விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்