ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே அன்றாடம் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், நடைபாதையினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இச்சாலையால் வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் வாகனஓட்டிகள் நலன்கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?