சிவகங்கை- மதுரை சாலையில் போதிய வேகத்தடைகள் இல்லாததால் இப்பகுதியில் வாகனஓட்டிகள் அதிவேகத்தில் செல்கின்றனர். மேலும் இச்சாலையில் பள்ளிகள் அமைந்துள்ளதால் காலை, மாலை நேரங்களில் மாணவிகள் சாலையை கடக்க சிரமமடைகின்றனர். மேலும் இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சாலையில் கூடுதல் வேகத்தடைகள் அமைத்துத்தர வேண்டும்.