வடிகால் வசதியுடன் சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-09-13 16:15 GMT

தஞ்சை மாவட்டம் மேல வெளி ஊராட்சி தனலெட்சுமி நகரில் செல்லும் சாலை மழை நீர் அரிப்பால் மிகவும் சேதமடைந்ததால், தார் சாலையாக போடும் பணி தற்போது நடைபெறுகிறது. ஆனால் மீண்டும் மழை நீர் தேங்காமல் இருக்க சாலையின் அடியில், வடிகால் குழாய் பதிக்காமல், சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் சிறிய மழை பெய்தாலே சாலை மீண்டும் சேதமடையும் நிலை ஏற்படும். எனவே வடிகால் வசதியுடன் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் மேலவெளி.

மேலும் செய்திகள்