கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

Update: 2026-09-13 13:30 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் இருந்து கடம்பூர் வரை சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலையோரங்களில் பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்களாகியும் முடிக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பாதியில் நிற்கும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்