கரூர் மாவட்டம் சுக்காலியூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் முன்னாள் சுங்ககேட் பகுதியில் இருந்து திரும்பும் குறுகிய சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அருகில் பெட்ரோல் பங்க் இருப்பதால் அந்த வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு ஒதுங்கும் போது இந்த பள்ளத்தில் சிக்கி அடிக்கடி அவதிக்குள்ளாகின்றனர். எனவே பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்கும் வகையில் சாலையில் உள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.