வேகத்தடைகளில் வெள்ளைக்கோடு வரையலாமே!

Update: 2026-09-13 16:24 GMT

கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை மேம்பாலத்தில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் செல்வதற்குள் 3 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதி மிகவும் நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் விபத்துகளை குறைக்க இவை அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் எந்த வேகத்தடையிலும் வெள்ளை நிறக்கோடுகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருவோர் இந்த வேகத்தடைகளில் ஏறி இறங்கும் போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நடைபெறும் முன்பு வேகத்தடைகளில் வெள்ளை நிறக்கோடுகள் வரைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்