திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி அருகே இந்திராநகரில் உள்ள சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளம் இருப்பது தெரியாமல் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.