கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சிங்கிரிப்பட்டி ஊராட்சியில் இந்திரா நகர் முதல் சிந்தாமணிக்காடு வரை செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சேதமான சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.