சிவகாசி ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பர்மா காலனிக்கு செல்லும் சாலை, அதாவது பெரியகுளம் கண்மாய் அருகே தொடங்கி பர்மா காலனி வரை சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் அன்றாட பயணம் செய்யும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த சாலையில் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. மேற்கண்ட சாலையினை விரைந்து சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..