மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் அன்றாடம் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இச்சாலையால் வாகனங்களின் அடிக்கடி பழுது ஏற்படுகின்றது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சேதமடைந்து கிடக்கும் சாலைகளை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.