நாமகிரிப்பேட்டை அருகே புதுப்பட்டியில் இருந்து மூலபள்ளிபட்டிக்கு சிமெண்ட் சாலை செல்கிறது. இந்தநிலையில், மாதா கோவில் பகுதியில் உள்ள சிமெண்ட் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடையும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. எனவே பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.