பெரம்பலூர் - ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் கல்லாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட குறுகிய பாலத்தில் ஒரு வாகனம் செல்லும் போது மற்றொரு வாகனம் ஒதுங்கி செல்ல முடியாத நிலை உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.