அரியலூரில் இருந்து வி.கைக்காட்டி வழியாக காரைக்குறிச்சி வரையிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது. இதில் சுண்ணாம்புக்கல் ஏற்றிச்செல்லும் லாரிகள் செல்வதால் அதிகளவில் புழுதி பறக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கித் தவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், லாரிகளில் இருந்து சிதறும் மணல் சாலையில் படிந்துள்ளதால் மழைக்காலங்களில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் தண்ணீர் தெளிக்கவும், சிதறிய மண்களை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.