செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பையம்பாடி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.