திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் ஊராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட பழத்தோட்டம் பகுதியில் எம்.ஜி.ஆர். நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் மண் சாலை போல் உள்ளது. இதனால் அந்தச் சாலை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த சாலையைச் சீரமைக்க சமபந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர், பொம்மிகுப்பம்.