தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் வேம்பார் ரோட்டில் இருந்து பாரதி தெருவுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. பலமுறை மனு கொடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்த சாலை சீரமைக்கப்படுமா?.