ஆற்காடு நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக திகழ்வது தொல்காப்பியர் தெரு, ஜீவானந்தம் சாலையாகும். இந்தச் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட சாலையாகும். தற்போது சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு கம்பிகள் பெயர்ந்து பயன்பாட்டுக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை சீரமைக்கப்படாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-கோ.கீர்த்திவாசன், ஆற்காடு.