அரியலூர் மாவட்டம் இலையூர் கனரா பேங்க் சாலை மிகவும் மோசமான நிலையில் பெரிய பள்ளங்களுடன் குண்டும், குழியுமாக மாறி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் பாம்பு மற்றும் தேள் உள்ளிட்ட விஷஜந்துக்கள் வந்து செல்வதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.