பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பாலையூர் வேதநதி ஆற்றங்கரையில் இருந்து மணியார் ஏரி வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி வழியாக விவசாயிகள் தங்கள் வயல்களில் இருந்து விளை பொருட்களை வாகனங்களில் கொண்டு வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.