சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-08-09 13:07 GMT

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தா.பேட்டை ஒன்றியம் மாவலிப்பட்டி கிராமத்தில் இருந்து மங்கலம் கிராமத்திற்கு செல்லும் சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறி ஜல்லிகற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் முசிறிக்கு பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வர முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திடும் இந்த சாலையை விரைந்து சீரமைத்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்