விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல்நகர் மற்றும் திருவள்ளுவர் நகரில் உள்ள சாலைகள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், அந்த வழியாக செல்பவர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த சாலையால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைப்பார்களா?