திருவள்ளூர் மாவட்டம் மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சரியான நேரத்திற்கு அலுவலகங்கள் செல்லமுடியாமல் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.