விபத்து அபாயம்

Update: 2026-08-09 09:36 GMT

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் கருணைபாளையம் பிரிவு உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் கான்கிரீட் கலவை சிதறி கிடக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, நடந்து செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகள் கீேழ விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லவே அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பேராபத்து ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

செந்தில், திருப்பூர்.

மேலும் செய்திகள்