திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், பாக்கம் திருநகரில் தெருவின் நடுப்பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். சில சமயங்களில் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடுத்தெருவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.