அளுக்குளி ஊராட்சிக்குட்பட்ட கோபிபாளையம் கிராமம் அம்பேத்கர் நகர் அருகே அம்மன் நகரில் உள்ள வீதியில் மண் சாலை உள்ளது. அருகே உள்ள பாசன வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவு வரும்போது சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. அதனால் வீதியில் நடக்கும் போது வழுக்கி விழும் அபாயமும் உள்ளது. எனவே எங்களுக்கு சாக்கடை கால்வாய் வசதியுடன் கூடிய தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?