ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு செல்ல குறுகிய தடம் உள்ளது. அந்த வழி முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் போல மண்டிக்கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பாதையை சுத்தம் செய்தால் பொதுமக்கள் சென்று வர ஏதுவாக இருக்கும்.