வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதேப்பட்டி ஊராட்சியில் பந்திகுறி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 73 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் ஒரே இடத்தில் இல்லாமல், இரு தெருக்களில் தனித்தனியாக அமைந்து உள்ளன. இதில் வகுப்பறை கட்டிடத்தின் அருகே குடியிருப்பு பகுதியின் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. மழைக்காலங்களில் கால்வாயில் கழவிநீர் சீராக செல்ல முடியாததால், கழிவுநீருடன் மழைநீரும் கலந்து வகுப்பறைகள் முன்பு தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அந்த தெருவில் பேவர்பிளாக் சாலை அமைக்க வேண்டும்.