குண்டும், குழியுமான சாலை

Update: 2026-08-02 14:10 GMT


மயிலாடுதுறை மாவட்டம் புத்தூரில் இருந்து புதுப்பட்டினம் சாலையில் பன்னீர் கோட்டகம் பஸ் நிலையம் அருகில் சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. அதனை முறையாக சீர்செய்யாமல் மணல் நிரப்பி மூடியுள்ளனர். அந்த பள்ளத்தில் மழை பெய்ததால், தற்போது குண்டும், குழியுமாக மாறி உள்ளது. அருகில் மிகப்பெரிய வாய்க்கால் இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பன்னீர் கோட்டகம் பஸ் நிலையம் அருகே குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், பன்னீர் கோட்டகம்.

மேலும் செய்திகள்