வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அன்றாடம் அந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். சேதமடைந்த இந்த சாலையால் அவ்வப்போது சிறு,சிறு விபத்துகளும் நடந்து வருகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைப்பார்களா?