ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம்- உச்சிப்புளி அருகே உள்ள சாலை சேதமடைந்து காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே பயணிக்கும் வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயம் அடைகின்றனர். பெரும்பாலான வாகனஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்துதர நடவடிக்கை எடுப்பார்களா?