புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட வீரபாகு பகுதியில் இருந்து ஒரு சாலை கடற்கரைக்கும், மற்றொரு சாலை மேல மணக்குடிக்கும் செல்கிறது. 3-வதாக ஒரு சாலை புத்தளம் செல்கிறது. இந்த சாலைகளில் தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிகள் பரப்பப்பட்டு 3 மாதங்கள் ஆகியவிட்டது. ஆனால் இதுவரை தார் சாரலை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரத்துக்குள்ளாகி வருவதுடன், கீழே விழுந்து விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி விரைந்து தார்சாலை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.