சேதமடைந்த சாலை

Update: 2026-07-26 17:03 GMT

ராஜபாளையம் சம்மந்தபுரம் 11-வது வார்டு முதல் தெருவில் உள்ள பிரதான சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும் மழை பெய்யும் காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி சாலையை ஆய்வு செய்து புதிய தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்