புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம் வன்னியம்பட்டி ஊராட்சி நெய்வாசல்பட்டி கிராமத்தில் அம்மன் திடல் பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நெய்வாசல்பட்டி மேலத்தெரு பகுதி வரை மண்சாலையாக உள்ளதால், பள்ளி மாணவர்கள், முதியோர்கள் மற்றும் விவசாயிகள் மழைக்காலங்களிலும், இரவு நேரங்களிலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, நெய்வாசல்பட்டி மேலத்தெரு வரை சிமெண்டு சாலை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.