கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் என்.தட்டக்கல் முதல் வேலம்பட்டி வரை செல்லும் சாலை குறுகலாக காணப்படுகிறது. மேலும் சாலையின் இருபுறமும் புளிய மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் சிலர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களை அதிவேகத்தில் இயக்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலையை விரிவுபடுத்தவும், வேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.