குண்டும், குழியுமான சாலை

Update: 2026-07-26 13:42 GMT

கோவையை அடுத்த வெள்ளலூரில் இருந்து பட்டணம் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் அந்த சாலை பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்