தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணகிரி சர்வீஸ் சாலை மழையால் சேதமாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றன. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.