சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் தர்மப்பட்டி-செட்டிக்குறிச்சி சாலையில் தார்சாலை அமைக்கும் பணி நீண்ட நாட்களாகவே நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மந்தமான நிலையில் நடைபெற்று வருவதால் இவ்வழியே தினமும் கடந்து செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சாலை பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?