பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே குதிரைவட்டம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.