சென்னை அண்ணாநகரில், சாலைகளை ஆக்கிரமித்து பல கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கடைக்கு வருபவர்கள் அவர்களின் வாகனங்களை, சாலையின் ஓரத்திலேயே நிறுத்திவிடுகின்றனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைகளின் உரிமையாளர்கள் அங்குள்ள மழைநீர் கால்வாயையும் மூடிவிடுகின்றனர். மழைநீரும் அங்கு தேங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.